kd;dhH ,izaj;jsk;

http://img111.imageshack.us/img111/8508/mannarmapwg5.th.jpg

                                Muso  Education MathuramVillages  OMGO

 

        If you cannot read this site, please download Baminni tamil font in your computer. Just click here baminni.ttf and save it then transfer this file into font file in your control panel.

kd;dhH kf;fNs ,J cq;fSf;fhf cUthf;fg;gl;l ,izaj;jsk;. kJuk; vDk; gf;fk; ,izaj;js rQ;rpifahf cs;Ns tpupfpd;wJ ,jpy; ftpij fl;Liu ,J Nghd;w gy ,yf;fpa tplaq;fs; ,lk; ngWfpd;wJ cdNt jhuhskhf fye;J nfhz;L cq;fs; Mf;fq;fq;fis vkf;F vOJq;fs;.

ePq;fs; jw;nghOJ ,yq;ifapy; trpj;JtUk; kd;dhH gy;fiyf;fof khztuh? mg;gbahdhy; jaTnra;J Muso gf;fj;ij re;jpf;f jtwNtz;lhk;.

ePq;fs; jw;nghOJ ntspehl;by; trpj;JtUk; kd;dhH khtl;l gy;fiyf;fof khztuh?

mg;gbahdhy; jaTnra;J OMGO gf;fj;ij re;jpAq;fs;.

 

njhlHGfSf;F:

RAVENKOLLBAKKEN 79, Oslo. 0971 NORWAY

Webmaster: Thevethas@hotmail.com

  Muso    Mannar university students organization

                   kd;dhH caHju khztH xd;wpak;

 

OMGO   Overseas Mannar Graduates Organization

        fly;fle;je;j kd;dhH gl;ljhupfs; mikg;G

 

 

 nra;jpfs;

தலைமன்னாரையும் மன்னார் பெரு நிலப்பரப்பையும் இணைக்கும் வகையில் மூன்று கிலோ மீட்டர் நீளமான பாதையொன்றை நிர்மாணிக்க நெடுஞ்சாலைகள் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. நான்கு நிரைகளை கொண்டதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் இந்த பாதையில் 157.10 மீட்டர் நீளமான பாலமொன்றும் நிர்மாணிக்கப்பட்டு வருவதாக நெடுஞ்சாலைகள் அமைச்சு கூறியது.

ஜப்பான் அரசின் 190 கோடி ரூபா உதவியுடன் நிர்மாணப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தலைமன்னாரையும் மன்னார் நிலப்பரப்பையும் தொடர்புபடுத்தும் தள்ளாடி பாலமும் பிரதான பாதையும் புலி பயங்கரவாதிகளால் கடந்த காலத்தில் நாசமாக்கப்பட்டது. மன்னார் மாவட்டம் புலிகளின் பிடியில் இருந்து முழுமையாக மீட்கப்பட்டதையடுத்து மன்னார் மாவட்டத்தை புனரமைக்கவும் பாதைகளை செப்பனிடவும் அரசாங்கம் துரிதமாக நடவடிக்கை எடுத்தது.
இதன்படி, கடந்த வருட பிற்பகுதி முதல் பல்வேறு அபிவிருத்திப் பணிகள் இங்கு முன்னெடுக்கப்பட்டன. மன்னார் - மதவாச்சி பாதையும் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. இந்தப் பாதை தலைமன்னாருக்கான பாதையுடன் இணைக்கப்பட உள்ளது.

தள்ளாடி பாலத்துடன் கூடிய புதிய பாதை நிர்மாணிக்கும் பணிகள் 75 வீதம் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. அடுத்த வருடம் மார்ச் மாதமளவில் தலைமன்னாருக்கான பாதை திறந்து வைக்கப்படும் எனவும் நெடுஞ்சாலைகள் அமைச்சு கூறியது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வழிகாட்டலுடனும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் வடக்கு வசந்தம் ஜனாதிபதி செயலணி தலைவருமான பசில் ராஜபக்ஷவின் ஆலோசனையுடனும் மேற்படி பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.இதேவேளை, வடக்கு வசந்தம் திட்டத்துடன் இணைந்ததாக மன்னார் மாவட்டத்தை அபிவிருத்தி செய்ய பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன் கீழ் யோதவெவ அபிவிருத்தி, வாவிகளை புனரமைத்தல், நெடுஞ்சாலைகள் அமைத்தல், பாடசாலைகள், ஆஸ்பத்திரிகள், அமைத்தல் குடிநீர் திட்டங்கள் மேற்கொள்ளுதல் என்பனவும் அடங்குவதாக அறிவிக்கப்படுகிறது.

வடக்கின் வசந்தம் வேலைத் திட்டத்தின் கீழ் மன்னாரின் முசலி பிராந்தியத்திற்கான இரண்டாம் கட்ட மீள் குடியேற்ற நடவடிக்கைகள் நாளை செவ்வாய்க்கிழமை வடக்க அபிவிருத்தி செயலணித் தலைவர் பசில் ராஜபக்சவின் தலைமையில் இடம்பெறவுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அரிப்பு, சிலாவத்துறைப் பகுதிகளைச் சேர்ந்த இரண்டாயிரத்து 216பேர் உள்ளடங்கிய 515குடும்பங்கள் மீள் குடியேற்றப்படவுள்ளனர். இந்நிகழ்விற்கு மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிசாத் பதியுதீனும் பங்கேற்கவுள்ளார். அதேவேளை அரசாங்க திணைக்களங்களின் தலைவர்கள், இராணுவ, பொலீஸ், கடற்படை உயரதிகாரிகளும் இதில் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து அண்மையில் இலங்கை அரசினால் விடுவிக்கப்பட்ட பகுதியான மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரிவுக்குற்பட்ட விடத்தல்தீவு பகுதியில் அண்மையில் பொலிஸாரினால் புதிய பொலிஸ் நிலையம் ஒன்று திறந்து வைக்கப்பட்டிருந்தது. இந்த பொலிஸ் நிலையத்தின் செயற்பாடுகளை நேரில் சென்று பார்ப்பதற்காக இன்று சனிக்கிழமை மதியம் 12.45மணியளவில் பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்கிரமரட்ன அவர்கள் திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். இவருடன் பிரதிப்பொலிஸ் மா அதிபரும் வருகை தந்திருந்தார். இதன்போது விடத்தல்தீவு பகுதியில் அண்மையில் புதிதாக திறக்கப்பட்ட பொலிஸ் நிலையத்தை பார்வையிட்டதோடு அங்குள்ள குறைநிறைகளையும் கேட்டறிந்தார். இதன்போது மன்னார் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஜெயகமால் உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் நி.டி.எஸ்.ஆர் அசன் மற்றும் விடுவிக்கப்பட்ட பகுதிகளில் திறக்கப்பட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளும் கலந்துக் கொண்டனர். இந்த விஜயத்தின் போது மன்னார் மாவட்ட பிரதேச ஊடகவியலாளர்களும் அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.